Tuesday, July 10, 2012

ஔவையார்

ஒளவை என்ற சொல்லின் பொருள்

ஔவை அல்லது அவ்வை என்ற சொல் அவ்வா என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்ற கருத்து பலரிடம் நிலவுகின்றது. ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது என்று பழந்தமிழ் அகராதி கூறும். பிற்காலத்தில் ஒளவை என்ற சொல், ஆண்டு மற்றும் அறிவு என்பவற்றில் முதிர்ச்சி அடைந்தவர்களை குறிக்கும் சொல்லாக விளங்கி்ற்றுப் போலும்.


ஔவையார் மிகவும் மதிநுட்பம் மிக்கவர்.தன்னலம் கருதாமல் சேவை செய்யக்கூடியவர்.சோழர்கால அரசர்களுக்கு ஔவையாரை மிகவும் பிடிக்கும்.அரசு விழாக்களில் பங்கேற்பது எப்பொழுதும் ஔவையாருக்கு தனி அழைப்பு வந்துவிடும்.

குலோத்துங்க மன்னன் முடிசூட்டுவிழாவில் ஔவையாரும் பங்கேற்றார்.பல அமை ச்சர்களும்,புலவர்களும் அரசரை வாயார வாழ்த்தி மகிழ்ந்தனர்.அப்பொழுது ஔவையார் மன்னனை வாழ்த்தி பாட எழுந்தார்.மன்னரும்,அவையோரும் ஔவயார் என்ன வாழ்த்தி பாடப்போகிறர் என ஆவலுடன் பார்த்துகொண்டிருந்தனர்.அப்பொது ஔவையார்"வரப்புயர"எனச்சொல்லி விட்டு அமர்ந்துவிட்டார்.

இதனைகேட்ட யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.ஔவையாரே எழுந்து இதற்கு பின் வருமாறு விளக்கம் கூறினார்.

வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயர்வான்

விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால், வயலில் நீர் அதிகளவு தங்கியிருக்கும். அப்போது நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக அமைந்தால் தான் மக்களின் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். மக்களின் வறுமை ஒழியும். அப்போதுதான் அரசு சிறக்கும். ஒரு அரசின் பெருமை, வரப்பு உயர்வதை ஆதாரமாகக் கொண்டே அமைந்து விடுகிறது என்பதை ஒளவையார் எளிமையாக விளக்குகிறார்.



No comments:

Post a Comment